ஆண்டுதோறும் பல்வேறு
பதிப்பகங்கள் புதிய புதிய புத்தகங்களை சென்னைப் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு
வெளியிடுகின்றன. கண்காட்சிக்கு வரும் பெரும்பாலான வாசகர்களும் புதிய புத்தகங்களைத்
தேடியே வருகின்றனர். ஆனால் இவ்வாறு வெளியிடப்படும் புதிய தமிழ்ப் புத்தகங்களின்
பட்டியல் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் பொதுவில் வாசகர்களுக்குக் கிடைப்பதாக இல்லை.
இதனால் வாசகர்கள் தனித்தனியாக ஒவ்வொரு கடையாகச் சென்று புதிய புத்தகங்களைத் தேடும்
நிலை உள்ளது.
வாசித்தலை நேசிக்கும்
தமிழ் வாசகர்களிற்காக, தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்
திரட்டித் தரும் விருபா இணைய தளம் ஆண்டு தோறும் சென்னைப் புத்தகக்
கண்காட்சியையொட்டி வெளியாகும் புதிய புத்தகங்களின் பட்டியலை இணையம் மூலம் தந்து
வருகிறது. இதனை வாசகர்கள் அனைவரும் இலவசமாகப் பெற்றுக்கொள்ள வசதி
செய்யப்பட்டிருந்தது.
பதிப்பங்களால் எமக்குத்
தரப்படட்ட தரவுகளின் அடிப்படையில், 2009 ஆண்டில் வெளியான, தமிழ்ப் புத்தகங்களுடன்
இப்பொழுது சென்னைப் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு வெளியிடப்படும் புதிய
புத்தகங்களையும் சேர்த்த ஒரு புத்தகப் பட்டியலாக இது அமையும்.