தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பிரபஞ்சமும் தாவரங்களும்
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
பஞ்சவர்ணம், இராpanchavarnam.r@gmail.com
பதிப்பகம் : பஞ்சவர்ணம் பதிப்பகம்
Telephone : 919842334123
விலை : 240.00
புத்தகப் பிரிவு : சமய-தாவர வழிபாடு
பக்கங்கள் : 212
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 24
அளவு - அகலம் : 18
புத்தக அறிமுகம் :

ஆதிகாலத்தில் இயற்கையை மனிதர்கள் வணங்கி வந்தனர், கோவில்கள் வந்தபிறகு இறைவனோடு தொடர்புபடுத்தி தல விருட்சங்களை உருவாக்கினர் என்று கூறும் இந்தூலில் நவகிரகங்கள் - அதற்குரிய தாவரங்கள், ராசிகள் - அதற்குரிய மூலிகைகள், நட்சத்திரங்கள் - அதற்குரிய விருட்சங்கள், திசைகளும் - திசைகளுடன் தொடர்புடைய தாவரங்களும், நவக்கிரகம் - ராசிகள் - திசைகள் - நட்சத்திரம் - அதற்குரிய தாவரங்களின் பட்டியல் ஆகிய தலைப்புகளில் தாவரங்களின் பயன்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது. மேலும் 2011 ஆம் ஆண்டு நடந்த நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் சிறந்த நூலுக்கான பரிசை பெற்ற நூல் ஆகும். 

ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : 2011.12.26
மதிப்புரை வழங்கிய இதழ் : குங்குமம்
மதிப்புரை வழங்கியவர் பெயர் :

இயற்கைதான் ஆதிமனிதனின் முதல் தெய்வமாக இருந்தது. சூரியினையும் மழையையும் உலகெங்கும் தெய்வமாக மக்கள் ஏற்றார்கள். இப்படி தங்கள் வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருக்கும் தாவரங்களையும் வழிபடும் வழக்கம் நம் மண்ணில் இருந்திருக்கிறது. சங்க இலக்கியங்களில் இதுபற்றி ஏராளமான பாடல்கள் உண்டு. 

 
தாவரங்கள் இயற்கையாகவே தெய்வீகத் தன்மை பொருந்தியவையாக இருக்கின்றன. மாசு மருவற்ற இறைவனுடன் தாவரங்களைத் தொடர்புபடுத்தி வணங்குவது நமது வழக்கமாக இருக்கிறது. கோயில்களில் தலவிருட்சங்கள் காண்கிறோம். வீட்டுக்குள் துளசிச் செடி வைப்பதும் நம் மரபு. நோய்களைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் மேம்படுத்துபவை தாவரங்களே. அம்மை நோய்க்கு வேப்பிலை சாற்றுவதும் இயற்கை சிகிச்சை முறைதான். மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தும் இத்தாவரங்களே. பிரபஞ்சத்தின் நவக்கிரகங்களுக்கும் தாவரங்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி விளக்குவதோடு, அவற்றின் ஆங்கிலப் பெயர்களோடு அரிய தகவல்களையும் இடம்பெறச் செய்திருக்கும் பயனுள்ள நூல். பன்ருட்டி நகராட்சித் தலைவராக இருந்து, வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் ஊழலை ஒழிக்க முயற்சி எடுத்த பஞ்சவர்ணம் இந்நூலை எழுதியிருக்கிறார் 

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan