தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நீர் மேல் எழுத்து
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
கார்த்திகேசு, ரெkarthigesur@gmail.com
பதிப்பகம் : உமா பதிப்பகம்
Telephone : 60340411617
விலை : 25.00
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 152
ISBN : 9789679109429
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

முன்னுரை.

வாசகர்களுக்கு வணக்கம்.

என்னுடைய கடைசிச் சிறுகதைத் தொகுப்பு “ஊசி இலை மரம்” 2003இல் வெளிவந்தது. இன்னொரு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வர மேலும் ஒன்பது ஆண்டுகள் பிடித்திருப்பது எனது உற்பத்திச் செழுமை குறைந்திருப்பதைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆனால் இன்னொரு விதத்தில் மலேசியாவில் தமிழ் நூல்கள் பதிப்பிப்பதில் உள்ள பரிதாபங்களைப் பிரதிபலிப்பதாகவும் கொள்ளலாம். 

இந்தத் தொகுப்பு அச்சுப்பிரதியாக மட்டுமல்லாமல் மின்னூலாகவும் வெளிவருகிறது. தமிழை எல்லா மின் ஊடகங்களிலும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதில் அக்கறையுடன் இருப்பவர் நண்பர் முரசு நிறுவனர் முத்தெழிலன் நெடுமாறன். இவருக்கு ஊதியம் தரும் மின் தொழில்கள் பல இருந்தாலும், உவகை தரும் தொழிலாக தமிழை மின் உலகத்தில் இடம் பெறச் செய்வதை எடுத்துக்கொண்டுள்ளார்.

முத்துவின் கணினி நிபுணத்துவத்தோடு என் இலக்கியத்தை நான் இணைத்துக்கொண்டு பல ஆண்டுகள் ஆகின்றன. அதனால் பெரும் பயன் அடைந்தவன் நான். அப்போதிருந்து இப்போது ஆகக்கடைசியாக என்னுடைய இந்த மின்னூலை வடிவமைத்துத் தயாரித்த அவரின் அனைத்து முயற்சிகளும் இதுவரை ஒரு தன்னார்வ அடிப்படையிலேயே நடந்துள்ளன. ஏதாகிலும் ஒருவகையில் முத்துவுக்குக் கைமாறு செய்யும் நாள் வரலாம் என்றே எதிர்பார்க்கிறேன்.

ஆனால் தமிழை மின்னுலகில் ஏற்றி நிலை நிறுத்துவதில் தமிழை எழுதும் வாசிக்கும் நம் அனைவருக்குமே பயன் உண்டு. இனி நூல்களின் எதிர்காலம் மின்னூல் என்றுதான் நினைக்கிறேன். காகித வாசனையை நுகரும் நம் பித்து கூடக்கூடப் போனால் இன்னுமொரு இருபது ஆண்டுகளுக்கு நீடிக்கலாம். அடுத்து வரும் தலைமுறை அனைத்தையும் மின் பிரதியாகவே வாசிக்கும். ஆகவே தமிழும் அந்த நிலைக்குத் தன்னைத் தயார்படுத்தி நகர்த்திக் கொள்வது மிகவும் முக்கியம்.

வடிவம் மாறினாலும் அடிப்படையில் இது இலக்கியம் என்ற தன்மை மாறாது. ஆகவே இதனை நாடி வரும் அனைவரும் இலக்கிய நுகர்வாளார்களே. அவர்கள் அனைவருக்கும் வரவேற்பும் நன்றியும் கூறிக்கொள்கிறேன்.

அன்புடன்

ரெ.கார்த்திகேசு.


உள்ளடக்கம்:

 • ஆக்கலும் அழித்தலும்
 • மல்லியும் மழையும்
 • என் வயிற்றில் ஓர் எலி
 • அமீருக்கு இரண்டு பங்கு கேக்
 • எதிர் காலம் என்று ஒன்று
 • நீர் மேல் எழுத்து
 • மண் சமைத்தல்
 • உண்மை அறிந்தவர்
 • கொஞ்சம் மனிதன்
 • மௌனமாய்...
 • இந்தக் கடிதத்தில் முகவரி இல்லை
 • ஒரு கதையின் ஸ்டோரி
 • ஒரு நாள் உணவை...
 • சேர்ந்து வாழலாம் வா.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan